Sunday, November 24, 2019

மலாக்கா முத்துக்கிருஷ்ணன் வரலாற்றுப் பேரரசு 2019

வரலாற்றுப் பேரரசு விருது

மலேசிய இந்திய சிகை அலங்கரிப்பாளர் நிலைய உரிமையாளர்கள் சங்கம், ’மிண்டாஸ்’ (MINDAS), (Malaysian Indian Hairdressing Saloon Owners Association), 2019 ஜனவரி 8-ஆம் தேதி, மலாக்கா முத்துக்கிருஷ்ணனுக்கு ’வரலாற்றுப் பேரரசு’ எனும் விருதை வழங்கிச் சிறப்பு செய்தது. 


இந்த நிகழ்ச்சி பெட்டாலிங் ஜெயா, தோட்ட மாளிகையில் அமைச்சர் குலசேகரன் தலைமையில் நடைபெற்றது. தமிழ் மலர் நாளிதழில் சார்பில் வழக்கறிஞர் சரஸ்வதி கந்தசாமி; ’மிண்டாஸ்’ (MINDAS) சங்கத்தின் தலைவர் மகேந்திரன்; துணைத் தலைவர் சுதந்திரன்; செயலாளர் ராஜசேகரன் கலந்து கொண்டனர்.


வரலாற்றுப் பேரரசு விருது; 2000 ரிங்கிட் அன்பளிப்புடன், மலேசிய மண்ணின் தமிழ் வரலாற்றுப் பேராசான்; மலேசியத் தமிழர் வரலாற்று ஆவணப் பேரரசு எனும் அங்கீகாரமும் வழங்கப் பட்டது.  

மலேசியத் தமிழர்களின் வரலாற்றைப் பற்றி நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியதற்காகவும்; மலேசியாவில் இதுவரை 2460 தமிழ்க் கட்டுரைகள் எழுதி சாதனைச் செயததற்காகவும் அந்த விருது வழங்கப் பட்டது. நன்றிங்க ஐயா.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)